கார்ல்ஸ்' மிக்ஸ்..
இந்தியாவில் இருந்த வரை அலுவலகத்தில் நம்ம ஆட்களோடு தான் எல்லாமே என்பதால் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் நன்றாகப் புடுங்கிக் கொண்டிருந்தேன் - ஆணியை.. இங்கு வந்தவுடன் தான் ஆரம்பித்தது பிரச்சனை.. இவனுங்க பேசுறது ஒரு டாஷும் புரிய மாட்டேங்குது..
என்னோட டீம் மேனேஜர் ஒரு வயசான பாட்டி.. (வயசானா தான் பாட்டி'ன்னு எடக்கு மடக்கெல்லாம் வேண்டம் ப்ளீஸ்) நம்ம வயசுக்காரனுங்க பேசுனாலே புரியறது குதிரைக் கொம்பா இருக்குறப்ப இவங்களப் பத்தி சொல்லவே வேண்டம்..
திடீர் திடீர்னு 'ஆரன் ஆரன்'ன்னு பாட்டி கத்திட்டே இருக்கும்.. நடு ஆபிஸ்'ல ஏண்டா பாட்டி ஹாரன் அடிக்குதுன்னு யோசிச்சுட்டே வேலைய பார்த்துட்டு இருப்பேன்.. அப்பறமா பார்த்தா பக்கத்துல வந்து 'ஆரன், ஐ ஆம் காலிங் யு ஒன்லி'ன்னு சொன்ன அப்பறமாதான் அந்த 'ஆரன்' நான் தான்னு எனக்கு வெளங்கும்..
------------------------------------------------------------------------------------------------------
என் அலுவலகத்தில் நான் புடுங்கும் ஆணிக்கு சுத்தியல் வேறு ஒரு டீமிடம் தான் வாங்க வேண்டும் (அவனுங்க குடுக்குற பைல் தான் நமக்கு இன்புட்).. வந்த புதுசுல ஒருத்தனையும் தெரியாது.. அதனால குத்து மதிப்பாத்தான் கொஞ்ச நாள் பேசிட்டு இருந்தேன்.. நேர்ல பேசுனா கூட ஒரு வழியா அட்ஜஸ்ட் பண்ணிடலாம்.. போன்'லன்னா நம்ம கதை கந்தல் தான்..
இப்படி தான் ஒரு நாள் அந்த டீம்ல 'ஸ்டீவ் லைன்ஸ்'ன்னு ஒருத்தர் கூட பேச வேண்டி இருந்தது.. எந்தப் பிரச்சனையும் வந்துரக் கூடாதுன்னு சாமிய கும்புட்டுட்டு போன் பண்ணுனேன்..
ஹாய் ஸ்டீவ், ஐ ஆம் அருண்..
ஹலோ??
ஹாய் ஸ்டீவ், ஐ ஆம் அருண்..
ஹலோ?!?!?
அடடா, ஏழரை ஆரம்பிச்சுடுச்சு'ன்னு நெனச்சுட்டு மறுபடியும் சொன்னேன்..
ஹாய் ஸ்டீவ், ஐ ஆம் அருண்..
எஸ், ஹலோ.. ப்ளீஸ் ப்ரோசீட் பர்தர் என்றார், கொஞ்சம் கடுப்போடு..
அப்பறமா தான் புரிஞ்சது அது அந்த 'ஹலோ' என்று..
"ஹே, நீ எந்த எண்ணையச் சொன்ன" என்று வடிவேலு காமெடி டைப்பில் அட்ஜஸ்ட் பண்ணிப் போக வேண்டியதாய்ப் போயிற்று..
----------------------------------------------------------------------------------------------------
இதெல்லாம் கொஞ்ச நேரத்திற்குப் பிறகு நினைத்தால் சிரிப்பாக இருக்கும் விஷயங்கள்.. ஆனால் என்னை சிந்திக்க வைத்த ஒரு விஷயம் கூட சமீபத்தில் நடந்தது..
எங்கள் அலுவலகத்திற்கு எங்களை அழைத்துப்போக தினமும் ஒரு பேருந்து வரும்.. அது எங்கிருந்து வருகிறது என்று எனக்கு இன்று வரை தெரியாது.. ஆனால் எங்கள் இடத்திற்கு வரும் போதே நிரம்பி இருக்கும்.. கிடைக்கும் ஒரு சில இடங்களில் அமர்ந்து ஒரு வழியாகப் போய்விடுவோம்.. இதனால் எப்போதும் யார் பக்கத்திலாவது தான் அமர வேண்டியதாய் இருக்கும்..
எப்பவும் போல இங்கேயும் நம்ம தான் கடைசியா வந்து ஏறுவோம்.. அதனாலேயே என்னைக்கும் கிடைசி சீட் தான் நமக்குக் கிடைக்கும்.. சமயத்துல நின்னுட்டு கூட போக வேண்டியதா இருக்கும்.. அதே கடைசி சீட்ல எப்பவுமே ஒருத்தர் இருப்பாரு.. அட எப்பவுமே கடைசி சீட்ல இருக்காரே, ஒரு வேள நம்ம ஆளா இருப்பாரோன்னு ஒரு நாள் 'ஹாய்' என்றேன்.. ஒரு சின்ன சிரிப்புடன் தலையை மட்டும் ஆட்டினார்.. நானும் ஒன்றும் நினைத்துக்கொள்ளவில்லை.. ஆனால், மறுநாளும் இதே தான் நடந்தது.. அலுவலகத்தில் கூட எனக்குக் கொஞ்சம் தள்ளி தான் அமர்ந்திருப்பார், ஆனால் ஒரு நாள் கூட அவராக ஒரு முறை கூட சிரித்ததில்லை..
சரி, 'இது திமிர் புடிச்ச கேஸ் போல' என்று 7'G சுமன் ஸ்டைலில் நானே முடிவெடுத்தேன்.. அதன் பின்னர் அவரைப் பார்த்தல் நானே வேறு எங்காவது திரும்பிக்கொள்வேன்.. அவரருகில் மட்டுமே இடம் இருந்தால், நின்று கொண்டே சென்று விடுவேன்.. நாமெல்லாம் யாரு.. அப்படி கண்டிப்பா இந்த ஆளப் பார்த்து சிரிக்கணுமா என்ன?
இப்படியே போய்க்கொண்டிருக்கையில் ஒரு நாள் நடந்த டீம் மீட்டிங்கிற்கு அவரும் வந்திருந்தார்.. இவர் எங்கடா இங்க வந்தார் என்று எண்ணிக்கொண்டே உட்கார்ந்திருந்தேன்.. வழக்கம் போல் ஏதோ ஒரு நினைப்பில் நான் இருக்கையில், திடீரென அவர் பேச ஆரம்பித்தார்.. அப்போது தான் அந்தக் கொடுமையான உண்மையை உணர்ந்தேன்.. நம்மைப் போல் அவரால் ஒரு வாக்கியத்தைக் கூட முழுமையாய் ஒரே மூச்சில் சொல்ல முடியவில்லை.. அவ்வளவு திக்கியது.. ஆனாலும் கஷ்டப்பட்டு பேசினார்.. அப்போது அவரைப் பார்பதற்கே அவ்வளவு சங்கடமாக இருந்தது.. என் மீதே எனக்கு வெறுப்பாய் தோன்றியது.. ஆனால் ஒன்றும் செய்ய முடியவில்லை..
மீட்டிங் முடிந்து வெளியே வந்த பின் நானே அவரைப் பார்த்து லேசாக சிரித்தேன்.. அவர் எப்போதும் போல் சிரித்து விட்டு போய் விட்டார்.. ஒருவரின் வெளிப்புற தோற்றத்தை வைத்து அவரைப் பற்றி முடிவெடுப்பது எவ்வளவு பெரிய தவறு என்று அன்று தான் அனுபவத்தில் முதல் முறையாக உணர்ந்தேன்.. அன்று முதல் அவரை எப்போது பார்த்தாலும் சிரித்துவிட்டு ஒரு 'ஹாய்' சொல்லுவேன்.. இன்றும் அவரிடம் அதே சிரிப்பு மட்டும் தான்..
ஒருவர் என்னோடு எப்போதாவது சரியாகப் பேசவில்லை என்றால் நானெல்லாம் அன்றோடு அவர் பக்கம் திரும்புவதையே விட்டு விடுவேன்..அனால் அவரோ முதல் நாள் என்னைப் பார்த்து சிரித்த அதே சிரிப்பு தான் இன்று வரைக்கும்..
சிலர் என்றுமே மாறுவதில்லை.. இவர்களைப் போன்றவர்களிடம் நான் கற்றுக்கொள்ள வேண்டியது எவ்வளவோ உள்ளது..
Labels: Fillers
33 Comments:
//அப்பறமா தான் புரிஞ்சது அது அந்த 'ஹலோ' என்று..//
இது எந்த ஹலோ ப்பா புரியலியே
//ஒருவர் என்னோடு எப்போதாவது சரியாகப் பேசவில்லை என்றால் நானெல்லாம் அன்றோடு அவர் பக்கம் திரும்புவதையே விட்டு விடுவேன்..அனால் அவரோ முதல் நாள் என்னைப் பார்த்து சிரித்த அதே சிரிப்பு தான் இன்று வரைக்கும்..//
புன்னகை போதுமே வார்த்தைகள் கூட தேவையில்லை நட்புக்கு....
//எப்படியும் 2016 தேர்தலில் இளையதளபதி விஜய் முதலமைச்சர் ஆகிவிடுவர் என்ற நம்பிக்கையில்//
மாப்ள வேணாம்டி அப்பறம் நாமதான் எம்.பி.
எம்.எல்.ஏ க்கு போட்டி போட வேண்டியிருக்கும்
நம்மளால முடியாது மாப்பு.......
என்பேரும் இன்னையிலிருந்து ஆரன்!
/சிலர் என்றுமே மாறுவதில்லை.. இவர்களைப் போன்றவர்களிடம் நான் கற்றுக்கொள்ள வேண்டியது எவ்வளவோ உள்ளது.//
uNmai ..
//எப்படியும் 2016 தேர்தலில் இளையதளபதி விஜய் முதலமைச்சர் ஆகிவிடுவர் என்ற நம்பிக்கையில்//
நடக்குமா , இதத்தானே எல்லோரும் சொல்றாய்ங்க
ஆரன்.. ஹாஹாஹா
எண்ணெய் வடிஞ்சுதா சகா :))))
பாட்டி உங்க பேரை நல்லா தான் கூப்பிட்டிருக்காங்க. :D
கடைசி விஷயம் நல்ல பகிர்தல்.
1. ஆரன்?? ஹா ஹா ஹா.. :))))))))))
2. அவரும் ஹாய் சொல்லிருந்தா பிரச்சனையே இல்ல.. :))
3. :(((
//எவ்வளவோ பண்றீங்க.. //
என்ன பண்றோம்??? :)))
அந்த ஹலோ மேட்டர் நல்லாருந்திச்சு..
நன்றாக இருந்தது. எங்கே அந்தக் கதை பாதியிலேயே நிற்கிறது. முடிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். தொடர்கிறேன்.
உண்மையாக இருப்பதால், அனுபவம் போலித்தனமே இல்லாமல் அழகாக இருந்தது. கீப் இட் அப்.! எந்தக்குறையுமில்லாத பதிவு.!
@பிரியமுடன்...வசந்த்
//இது எந்த ஹலோ ப்பா புரியலியே//
-நாம ஹாய்'ன்னு சொல்ற மாதிரி அவரு ஹலோ'ன்னு சொல்லி இருக்காரு.. நானும் இங்க தான் புரியாம மாட்டிக்கிட்டேன்..
//மாப்ள வேணாம்டி அப்பறம் நாமதான் எம்.பி.
எம்.எல்.ஏ க்கு போட்டி போட வேண்டியிருக்கும்//
-வசந்த் MP .. நல்லா தான இருக்கு? Try பண்ணலாமே :)
@வால்பையன்
:))
@சூரியன்
//நடக்குமா , இதத்தானே எல்லோரும் சொல்றாய்ங்க//
-கண்டிப்பா நம்ம ஆட்சி தான் :)
@கார்க்கி
//எண்ணெய் வடிஞ்சுதா சகா//
-ரெம்பவே :)
@விக்னேஷ்வரி
-என்னோட சின்ன பேருக்கே இப்படி.. நீங்க இங்க வந்தீங்கன்னா? :))
@ஸ்ரீமதி
//என்ன பண்றோம்??//
-நம்ம எழுதுறத வந்து படிக்குறதே அவ்வளவு பெரிய விஷயம்.. அதையே பண்ணிட்டீங்க, ஒரு சின்ன கமெண்ட் எழுத மாட்டீங்களா :)
@Cable Sankar
-அண்ணா, நன்றி..
@ rathinamuthu
-அண்ணா, இங்க வீடு Shift பண்ற வேல போய்க்கிட்டு இருக்கு.. அதான் கொஞ்சம் Busy.. சீக்கிரமா எழுதிடுறேன்.. நன்றி..
@ஆதிமூலகிருஷ்ணன்
-ஆதி'ணா, ரெம்ப நன்றி..
//சிலர் என்றுமே மாறுவதில்லை.. இவர்களைப் போன்றவர்களிடம் நான் கற்றுக்கொள்ள வேண்டியது எவ்வளவோ உள்ளது..//
அனுபவங்கள் தான் நம்மை புடம் போடும், அருமை!
@குசும்பன்
-அண்ணா, நன்றி..
ஒருவர் என்னோடு எப்போதாவது சரியாகப் பேசவில்லை என்றால் நானெல்லாம் அன்றோடு அவர் பக்கம் திரும்புவதையே விட்டு விடுவேன்..அனால் அவரோ முதல் நாள் என்னைப் பார்த்து சிரித்த அதே சிரிப்பு தான் இன்று வரைக்கும்..
சிலர் என்றுமே மாறுவதில்லை.. இவர்களைப் போன்றவர்களிடம் நான் கற்றுக்கொள்ள வேண்டியது எவ்வளவோ உள்ளது..
ரொம்ப சரி அருண்.
@Kalyani Suresh
-நன்றி :)
விறு விறு எழுத்து நடை வாய்க்கப் பெற்றிருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்.
@ +VE Anthony Muthu
- அண்ணா, நன்றி..பேருலயே பாசிடிவ்வா? கலக்குறீங்க..
ஆனால் என்னை சிந்திக்க வைத்த ஒரு விஷயம் கூட சமீபத்தில் நடந்தது..
//
என்னாதிது??? சின்னப்புள்ள தனமா இருக்கு??
இஃகிஃகிஃகி
ஜோக் அபார்ட்...
அனுபவம் ஒரு வித்யாசமான ஆசிரியர்.அது பாடம் நடத்தி பரிட்ச்சை வைப்பதில்லை.பரிட்ச்சையின் மூலம் பாடங்களை நடத்துகின்றது.
@எம்.எம்.அப்துல்லா
//அது பாடம் நடத்தி பரிட்ச்சை வைப்பதில்லை.பரிட்ச்சையின் மூலம் பாடங்களை நடத்துகின்றது.//
-அட அடா.. அண்ணா, எங்கேயோ போய்ட்டீங்க.. :)
நன்றி!!!
கலக்குடா மச்சி.. உனக்குள்ள இவ்ளோ ஃபீலிங்ஸ் ஆஃப் யுகே இருக்காடா..
ஹிஹிஹி.... அனுபவம் அருமை!தொடர்ந்து தொரடருங்கள்! :)
ரொம்ப alagaa eluthi இருக்கீங்க arun..
ரசிக்கும் விதத்தில் arumai..
(Tamil Typewriter konjam pirachanai)>>:)
//அனுபவம் ஒரு வித்யாசமான ஆசிரியர்.அது பாடம் நடத்தி பரிட்ச்சை வைப்பதில்லை.பரிட்ச்சையின் மூலம் பாடங்களை நடத்துகின்றது.//
நன்றாக சொன்னீர்கள்,எம்.எம்.அப்துல்லா !!
//என்னோட டீம் மேனேஜர் ஒரு வயசான பாட்டி.. (வயசானா தான் பாட்டி'ன்னு எடக்கு மடக்கெல்லாம் வேண்டம் ப்ளீஸ்)//
ஒரு வயசானா பாட்டி கிடையாது... குழந்தை... ;-)
Post a Comment
எவ்வளவோ பண்றீங்க.. இதப் பண்ண மாட்டீங்களா??
Subscribe to Post Comments [Atom]
<< Home