என்னை வாழ வைத்துக்கொண்டிருக்கும் திரு. இளையதளபதி விஜய் அவர்களுக்கு..
மு. கு : இந்தப் பதிவு விஜய் அவர்களைப் பற்றியோ அவரின் பெருமைகளைப் பற்றியோ அல்ல.. இது முழுக்க முழுக்க என் வாழ்வில் அவரின் பங்கைப் பற்றியதே!.
விஜய் அவர்களை வெகு காலமாக எனக்குத் தெரிந்திரிந்தாலும், நான் அவரை உற்று நோக்க ஆரம்பித்தது 'பத்ரி'யில் இருந்து தான். அன்று ஆரம்பித்த அந்த வேகம், இன்றும் என்னுள் அப்படியே உள்ளது.. சொன்னால் நம்ப மாடீர்கள்.. குருவி படத்தை முதல் நாள் பார்ப்பதற்காக புனே'வில் இருந்து விமானம் மூலம் தமிழ்நாடு வந்தவன் நான்.. இது ஒவ்வொரு நடிகரின் ரசிகனுக்கும் இருக்கும் இயல்பான வேகம் தான் என்றாலும் நான் இங்கு சொல்லப் போவது அது பற்றி அல்ல.. இந்த வேகம் எவ்வாரெல்லாம் என் வாழ்க்கையை மாற்றியமைத்து இப்போது எந்த நிலையில் என்னை வைத்துள்ளது என்பது பற்றிய ஒரு சின்ன ஆய்வு தான் இந்தப் பதிவு..
இனி, ஸ்டார்ட் மியூசிக்..
"சர்ச்ச தேடித் போனதில்ல
பள்ளிவாசல் பார்த்ததில்ல
கோயில் குளத்தில விழுந்ததில்ல
நாங்க Bad Boys தான்"
..இப்படித் தான் ஆரம்பித்தது என் பள்ளி நாட்களும்
சில ரம்யாக்களும் பல திவ்யாக்களும் என் வாழ்வில் வந்து வந்து போன காலம் அது.. ஆனால் பெரிய பாதிப்பு என்று அப்போதெல்லாம் எப்போதுமே ஏற்ப்பட்டதில்லை.. அப்போதைய வருத்தமெல்லாம் ஓரிரு நாட்களோ அல்லது ஓரிரு வாரங்களோ தான்.. அதற்குள் அடுத்ததாக ஒரு அம்பிகாவை பார்த்திருப்பேன்..
நடு ரோட்டுல பாட்டி ஒருத்தி லிப்ட்'னு கேட்டு நான் அந்த சான்ஸ்'அ மிஸ் பண்ணியதே இல்லை, அது வீட்டில் பேத்தி இருக்கிறதோ இல்லையோ.. அப்படி எதுவும் இல்லனா கம்பெனிக்கு ஒன்னும் பெரிய நட்டம் இல்லை.. ஆனா ஒரு வேள இருந்துடுசுன்னா? எப்பவுமே கல்ல நாம எரிஞ்சுடனும், மாங்கா விழுதோ இல்லையோ.. அப்படியே ஒரு பொண்ணு இருந்தாலும் அது வந்து தேங்க்ஸ்'னு சொல்லி காபி குடுக்குறதெல்லாம்.. ஹி ஹி.. கஷ்டம் பாஸ்.. அதையும் தாண்டி அரவிந்தசாமி மேட்டர் எல்லாம்.. சரி,சரி.. அதெல்லாம் விடுங்க..
அதே போல், என் 'டாடி போடும் புல் ஹேன்ட் ஷர்ட்டுல' இருக்கும் சில்லறை தான் நமக்கு அப்போதைக்கு பாக்கெட் மணி..
இப்படியே போய்க்கொண்டிருந்த என் பள்ளி வாழ்க்கை ஒரு வழியாக பேப்பர் சேஸ் பண்ணியும் பிட்டு அடிச்சும் பாஸ் பண்ணி முடிவுக்கு வந்தது..
(எனது பள்ளி நாட்களில் நடந்த பல சுவாரஸ்யமான சம்பவங்களை தனிப் பதிவில் பார்க்கலாம்..)
நான் வாங்கிய மார்க்குக்கு கோயம்பத்தூரில் ஒரு கல்லூரியில் சீட் கிடைத்தது.. அந்தக் கல்லூரியின் அருமை பெருமைகளையெல்லாம் விட அந்தக் கல்லூரியில் அதிகம் பொண்ணுங்க கேரளாவில் இருந்து தான் வருவாங்க என்று என் நண்பன் சொன்னது மட்டும் தான் அப்போது ஜில்லென்று நினைவில் இருந்தது..
இனி.. ஓவர் டு காலேஜ்..
ஆல் தோட்ட பூபதியில் விஜய் சிம்ரனைப் பார்த்தவுடன் அப்படியே மேல பறக்க ஆரம்பிப்பாருல.. அந்த மாதிரி தான் நானும்.. விஜய் பிறந்த அந்த ஜூன் மாதத்தில் - கல்லூரிக்குள் பாதம் பட்ட முதல் நாளே நானும் பறக்க ஆரம்பித்தேன்..
கேரளாப் பொண்ணுங்க.. அட அட அடா.. சிம்பிள்'ஆ சொல்லனும்னா
'MTV பிகரு எல்லாம் எதிரில் வந்து நின்னா ஞாயமா..
LKG UKG படிக்கும் பையனுக்கு தாங்குமா'
என்று எனக்காகவே விஜய் பாடி இருப்பரோ என்று எண்ணத் தோன்றியது..
சிம்ரன்,த்ரிஷா என கோடம்பாக்கத்து தேவதைகள் வந்து கொண்டிருந்த என் கனவு ஸ்டேட் அப்டேட் ஆகி மீரா ஜாஸ்மின், பாவனா, கோபிகா என காட்ட ஆரம்பித்தது.. நாளாக நாளாக 'மனசுக்குள்ளே காதல் வந்துச்சோ' என்று கோபிகா என் கனவினில் நேரடியாகவே கேட்க ஆரம்பித்தார்.. அதான் நமக்கு எப்பவுமே வந்துட்டு தான இருக்கு.. நம்மள பார்குற பொண்ணுங்களுக்கு வருதான்னு கேட்டு சொல்லு என்று பதில் சொல்லி விடுவேன்..
எவ்வளவு தான் டாப்'ஆ டிரஸ் பண்ணிட்டு ஜம்முனு கிளம்பினாலும் கடைசியில சச்சின்'ல வடிவேலு சொல்ற மாதிரி 'ஹ்ம்ம்.. என்னடா பார்க்கக்கூட மாட்டேன்குராளுக' என்று நம் குரூப்'ல் யாரவது சொல்லும்படியாகத் தான் அது கடைசியில் முடியும்.. சரி, இதுக்கெல்லாம் அசருற ஆளா நம்ம.. அதான் விஜய் யூத்'ல 'பெர்சனாலிடிங்க்றது உடம்புல இல்ல, மனசுல தான் இருக்கு'னு' நமக்கவே சொல்லி இருக்காருல அப்படின்னு நாமளும் விடாம ட்ரை பண்ணிட்டே இருப்போம்..
இப்படியே 'கே.ஜி', 'அர்ச்சனா தர்சனா', 'கங்கா யமுனா' தியேட்டர்ல வர்ற நம்ம படத்த எல்லாம் பார்த்துட்டு காலம் நல்லாவே போயிட்டு இருந்தது.. விஜய் அஜித் படம் ரிலீஸ் ஆயிட்டே இருக்குற வரைக்கும் நமக்கு என்னைக்குமே தீபாவளி தான்.. திருப்பாச்சியில் 'நீ எந்த ஊரு.. நான் எந்த ஊரு.. முகவரி தேவையில்ல..' என்று விஜய் மறைமுகமாக அஜித்தின் 'முகவரி' படத்துக்கு ஆப்பு வைக்கிறார் என்று நாங்களும் எங்கள் பங்கிற்கு லொள்ளு சபா ரேஞ்சுக்கு பேசிக்கொண்டிருப்போம்.. இந்த கேப்'ல ஒரு வழியா மூணாவது வருஷத்துக்கும் வந்தாச்சு..
எங்க காலேஜ்'ல மூணாவது வருஷத்தோட ஆரம்பத்திலேயே கம்பெனி எல்லாம் வர ஆரம்பிச்சுடும்.. நான் பிளேஸ் ஆனது ரெம்ப லேட்டு தான் என்றாலும் அதிலும் ஒரு சரித்திர முக்கியத்துவம் உள்ளது.. என் கம்பெனி பைனல் லிஸ்ட்'அ முடிவு பண்ணி அதில் என் பெயரையும் சேர்த்து வாசித்து சரியாக ஜூன் 22'ம் தேதி நேரம் அதிகாலை 1.30 மணிக்கு.. எல்லாம் முடிந்த பிறகு செலக்ட் ஆனவர்களை ஓரிரு வார்த்தைகள் பேசச் சொல்லுவார்கள்.. நான் சொன்னது " I'am really happy that I got placed on this particularly day". வந்திருந்த HR ஒருவர் கேட்டார், "Whats so important today"?
நான் சொன்னேன் "Today is Vijay's Birthday".. உடனே அவர் சொன்னது, "Oh.. That Cine star.. I've heard about him".. இங்கே முக்கியமாக நோட் பண்ண வேண்டியது என்னவென்றால் அவர் வந்திருந்தது Noida'வில் இருந்து..
வேலையும் கெடச்சாச்சு.. இதுக்கு அப்பறமும் எதாவது சொல்லனுமா என்ன? நம்ம நண்பன் ஒருத்தன் கிட்ட பைக் இருக்கும்.. அதோட ஒரு சாவி எப்பயுமே நம்ம பாக்கெட்'ல தான்.. இன்னொரு நண்பன் டே ஸ்காலர்.. எல்லா வாரக் கடைசிலயும் பைக்'அ எதுத்துட்டு செகண்ட் சோ படம் எதாவது பார்த்துட்டு அவன் வீட்டுக்கு போய்டுவோம்.. அங்க மத்த ரெண்டு நாளும் ஒரே கூத்து தான்..
இப்படியே ஜாலியா போய்கிட்டுருந்த என் வாழ்க்கையை அப்படியே மாற்றியது ஒரு 'ஹலோ'..
எப்பவுமே நல்ல விஷயங்கள் தான் 'ஹலோ' சொல்லி ஆரம்பிக்கப்படும் என்று நான் அன்றுவரை நினைத்துக்கொண்டிருந்தது தப்பு என்று என்னைப் பின்னொருநாளில் உணரச் செய்த நாள் அது..
அது எங்க காலேஜ் ஸ்போர்ட்ஸ் டே நடந்து கொண்டிருந்த ஒரு மாலை நேரம்..
அவள் : ஹலோ..
நான் : ஹலோ..
அவள் : Congrats..
நான் : Thanks..
அவள் : Very good Performance.. Which Dept are you from?
நான் : Thanks again.. I'm from IT dept..
இப்படி ஆரம்பித்த அந்தப் பேச்சு வார்த்தைதான் என் வாழ்க்கையை திசை திருப்பப் போகிறது என்று நான் நினைக்க அப்போது காலம் எனக்குக் கற்றுத் தரவில்லை..
அந்த 'அவளை'ப் பற்றி..
(தொடரும்...)
Labels: இளையதளபதி
31 Comments:
குட் ஸ்டார்ட்னு சொல்லலாம்னு பார்த்தா அழகான காதல் கதைக்கு ஏன் இப்படி ஒரு மொக்கைத்தலைப்பு மற்றும் புகழாரங்கள்? ஹூம்.! இன்னொரு குட்டி கார்க்கி.!
//குருவி படத்தை முதல் நாள் பார்ப்பதற்காக புனே'வில் இருந்து விமானம் மூலம் தமிழ்நாடு வந்தவன் நான்.//
அதனாலத்தான் குருவி ஊத்திகிச்சா!?
@ஆதிமூலகிருஷ்ணன் - மொக்கத் தலைப்பா?? அண்ணா,இதுக்கெல்லாம் நீங்க 2016'ல கண்டிப்பா வருத்தப்படுவீங்க :))
@வால்பையன் - ATM'அ நான் தமிழ்நாட்டுல இருக்கும்போது தான் பார்த்தேன்.. ஆனா அதுவும் ஊத்திகிச்சே??
//குருவி படத்தை முதல் நாள் பார்ப்பதற்காக புனே'வில் இருந்து விமானம் மூலம் தமிழ்நாடு வந்தவன் நான்// அடப்பாவி மக்கா என்னைய விட ரொம்ப நேசிக்கிறீர்களே தலைவர சந்தோஷம்
@பிரியமுடன்...வசந்த் - அட, நீங்களும் நம்ம கூட்டணி தானா? கண்டிப்பா 2016'ல நம்மாளு தான் CM. அப்பறமா நீங்களும் நானும் MP தான் :))
பத்ரி'ல இருந்து வில்லு வரைக்கும் எல்லாமே ஒப்பனிங் சோ தான்.. வேட்டைக்காரன் தான் எப்படின்னு தெரியல..
ம்ம்ம்ம்ம்
கலக்கல் கார்ல்ஸ்பெர்க்.. எனக்கு இன்னொரு சப்போர்ட் கிடைச்சாச்சு... நமக்க்குள்ள இன்னொரு ஒத்துமை நானும் பதிர்யில இருந்துதான் ஃபர்ஸ்ட் ஷோ பார்க்க ஆரம்பிச்சேன்... வசீகரா மட்டும் மிஸ் ஆகி ரெண்டாவது நாளு.. மத்தபடி சிங்கப்புரில் இருந்தப்பவும் ஒரு க்ரூப்பா போயி அலப்பறை பண்ணோமில்ல..
கதை ஸ்டார்ட் ஆவுது..ம்ம் கிளப்புங்க..
ஆதியண்ணா, கார்க்கியே குட்டிதானே.. ஐ மீன் ஸ்மால் பாய்..
கலக்குங்க கார்ல்ஸ்பெர்க். நல்லா எழுதி இருக்கீங்க.. தொடரவும்..தொடர்வோம்.
@வினையூக்கி - அண்ணா ரெம்ப நன்றி..
@கார்க்கி - ரெம்ப நன்றி'னா.. நம்மள மாதிரி இன்னும் ரெண்டு பேரு இருந்தா கண்டிப்பா 2016'ல நம்ம ஆட்சி தான்..
@நர்சிம் - மிக்க நன்றி அண்ணா..
ஆஹா... காதல் கதையா... நடக்கட்டும் தம்பி...
@இராகவன் நைஜிரியா - வாங்க அண்ணா.. நம்ம வாழ்க்கையில நடந்த ஒரு விஷயம் தான்..
:) Attendance... mee too..
:))
--vidhya
@Vidhoosh - Your attendance has been marked :) Thanks..
ஹாய் அருண்..
அன்பான மிரட்டலோட கூப்டு அனுப்பிருந்திங்க..
பிளாக் உலகில் இன்னும் பலபடிகளை கடந்து சாதனை புரிய வாழ்த்துக்கள்..
நீங்ககூப்டு ரொம்ப நாள் கழிச்சு இவ்ளோலேட்டா வந்ததுக்கு சாரி.. கொஞ்சம் அத்கப்படியான வேலைப்பளுவின் காரணமா பிளாக் பக்கம் கொஞ்சநாளா வர்றது கம்மியாயிடுச்சு.. அதான் லேட்..
அப்புறம்.. உங்க போட்டோ சரியா தெரியலை.. நீங்க எந்த காலேஜ்..
@सुREஷ் कुMAர் - வந்ததற்கு மிக்க நன்றி.
//பிளாக் உலகில் இன்னும் பலபடிகளை கடந்து சாதனை புரிய வாழ்த்துக்கள்..//
-வாழ்த்துகளுக்கு மற்றுமொரு நன்றி..
என்ன பார்த்து யாருன்னு கேட்டுட்டியே சுரேஷ்..
(Read it like Pokkiri opening fight dialogue)
விஜய் போட்டோவ பார்த்தாவது ஒரு Guess பண்ணி இருக்கலாம்ல..
(சாவிய கையில வச்சிருக்கலாம்ல..)
//அன்பான மிரட்டலோட கூப்டு அனுப்பிருந்திங்க..//
-மிரட்டல்லையே தெரிஞ்சிருக்க வேண்டாமா நாங்க யாருன்னு.. தெரிஞ்சா சத்தியமா வாங்க போங்கன்னு இனிமேல் உன் வாயில இருந்து வரவே வராது..
இப்படிக்கு,
Arun Karthik R K
IT dept.
டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
@பரிசல்காரன் - அண்ணா, டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்? யாருக்கு?? ஒன்னும் புரியலையே..
அச்சோ அச்சோ அச்சோ... கார்க்கி மாதிரி இந்தப் புள்ளயும் நாசமாப் போவாம மீண்டு வர ஜாக்பாட் ஐயனாரை வேண்டிக் கொள்கிறேன்
@Kiruthikan Kumarasamy
அண்ணா, வணக்கம்ணா..
விஜய்ய நமக்கு சின்ன வயசுல இருந்தே தெரியும்'னா..அதனால ரத்தத்துல ஊறுன விஷயமா போய்டுச்சு.. பேசாம நீங்களும் நம்மளோட வந்து சேர்ந்துடுங்க.. 2016'ல எப்படியும் நம்ம ஆட்சிதான் :)))
அப்பறமா ஒரு விஷயம்.. இப்ப ஜாக்பாட் ஐயனாரே நம்ம கட்சிலதான் இருக்காரு..
அட விஜய் இப்படியும் பைன்களை மாத்தியிருக்கிறாரா ? ஈழத்து மருமகனுக்கு நல்ல நகைச்சுவையோடு நடிக்கவும் தெரியும் தானே.
சாந்தி
@முல்லைமண்
- அக்கா, வாங்க.. வந்ததற்கு நன்றி.. மாத்த எல்லாம் ஒன்னும் இல்லேங்க.. நாங்களாதான் இப்படி..
:))))))))
@ஸ்ரீமதி
-மிக்க நன்றி :)
நல்லாருக்கு. :)
ஓஹோ :-)
//கேரளாப் பொண்ணுங்க.. அட அட அடா.. சிம்பிள்'ஆ சொல்லனும்னா
'MTV பிகரு எல்லாம் எதிரில் வந்து நின்னா ஞாயமா.//
ஆபிஸில் இருக்கும் ஒரு பெண்ணை பார்த்தாலே மனசு வேலை செய்யமாட்டேங்குது, இதுல காலேஜில் கும்பலா இருந்திருந்தா .... உங்க கஷ்டம் எனக்கு புரியுதுங்கோ!!!
@விக்னேஷ்வரி
-மிக்க நன்றி :)
@SK
-மிக்க நன்றி :)
எதுக்கு'னா இந்த ஓஹோ?
@குசும்பன்
--மிக்க நன்றி :)
ஆனா அதெல்லாம் ஒரு காலம்.. இப்ப எங்க :((
என்னதான் வெளிநாட்டு பொண்ணுங்களப் பார்த்தாலும், கண்டிப்பா நம்ம ஊரு பொண்ணுங்கள அடிச்சுக்கவே முடியாது'னா.. என்ன ஒரு அழகு :))
//என்னதான் வெளிநாட்டு பொண்ணுங்களப் பார்த்தாலும், கண்டிப்பா நம்ம ஊரு பொண்ணுங்கள அடிச்சுக்கவே முடியாது'னா.. என்ன ஒரு அழகு :))//
அய்யோ அய்யோ உங்களை எல்லாம் நினைச்சா பாவமா இருக்கு, ஈரான் பெண், மொரோக்கோ, லெபனீஸ், இரஸ்ய அழகிகள் இவுங்களுக்கு முன்னாடி நம்ம ஊரு பிகர்ஸ் எல்லாம் .... விடுங்க ஒன்னும் சொல்லுவதுக்கு இல்ல:) ஒரே ஒரு பெரு மூச்சு மட்டும் விட்டுக்கலாம்:)
@குசும்பன்
-அண்ணா, அதெல்லாம் பார்க்க இன்னும் நமக்கு குடுத்து வைக்கல.. ஒரு வேள பார்த்த அப்பறமா நான் கூட உங்கள மாதிரி சொன்னாலும் சொல்லுவேன் :))
Post a Comment
எவ்வளவோ பண்றீங்க.. இதப் பண்ண மாட்டீங்களா??
Subscribe to Post Comments [Atom]
<< Home