என்னைப் பற்றி..
பதிவுலக வரலாற்றில் இது வரை எழுதப்படாத ஒரு சரித்திரமாய், யாரும் இது வரையில் கண்டிராத ஒரு புதிய முயற்சியாய், படிப்போரை வியப்பில் ஆழ்த்தும் வண்ணம், என்றும் நினைவில் இருந்து நீங்காத ஒரு,...
சரி சரி.. டென்ஷன் ஆகதீங்க.. சும்மா.. முதல் பதிவு.. அதனால ஒரு பில்ட்-அப்'ஓட ஆரம்பிக்கலாம்னு நினைச்சேன்..
மற்றபடி தனியா எடுத்து சொல்ற அளவுக்கு எதுவும் இல்லீங்க.. நானும் உங்களை போல் ஒரு நாள் பிரபல பதிவராக வேண்டும் என்ற ஆசையில் இன்று எனது முதல் பதிவை வெளியிடும் ஒரு சராசரி மனிதன் (ஒரு நாள் மட்டும் பிரபல பதிவராக இருந்தால் போதுமா என்ற எதிர் கேள்வி கேட்க தடை செய்யப்பட்டுள்ளது)..
இங்கு, நான் இரு பதிவர்களை பற்றி நிச்சயம் குறிப்பிட்டாக வேண்டும்.. முதலாவதாக அண்ணன் கே கே அவர்களை பற்றி.. எனக்கு பதிவுலகம் பற்றி தெரிந்ததே இவரின் பரிசல்காரன் மூலமாக தான்.. நாமும் ஒரு நாள் பதிவு எழுத வேண்டம் என்ற எண்ணம் எனக்குள் உருவாக காரணமாக இருந்தது இவரின் எழுத்து நடையும் அதனுள் எப்போதும் இழையோடும் மெல்லிய நகைச்சுவையும் தான்..
அடுத்ததாக அண்ணன் ஆதி.. அது என்னமோ தெரியலங்க, அவரு என்ன எழுதுனாலும் நமக்கு ரெம்ப பிடிக்கும்.. அவரு சொல்ற பல விஷயங்கள் நமக்கும் எப்பவோ நடந்திருக்குற மாதிரி ஒரு பீலிங்(சத்தியமா எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலீங்க)..
இவங்க ரெண்டு பேருக்கும் என்னைய யாரு'னே தெரியாது.. ஆனா 'போக்கிரி'ல பிரகாஷ்ராஜ் சொல்ற மாதிரி, 'இவங்களுக்கும் எனக்கும் சம்பந்தம் இருக்கா இல்லையானு கண்டு பிடிக்க இன்னும் பத்து வருஷமாகும்(ஒரு டயலாக் தான்)'.. இந்த டைம் கேப்'அ யூஸ் பண்ணி பெரிய ஆள் ஆயிடலாம்னு பிளான் பண்ணிருக்கேன்..
ஆதலால், அனைவரும் எனக்கு ஆதரவளித்து என்னையும் உங்களுடன் இந்த நெடுந்தூர பயணத்தில் அழைத்து செல்லுமாறு உங்களனைவரையும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்(வை கோ மாதிரி எதுனா நடைபயனமானு கேட்டுடாதீங்க)..
பி.கு.
எனக்கு முதன் முதலாக பின்னூட்டமிட்ட அண்ணன் வால்பையனின் கருத்துக்கிணங்க எனது முதல் பதிவாக அவர் விரும்பிய(ச்சே ச்சே, நமக்கும் அதுக்கும் சம்பந்தமே இல்லப்பா) சரக்கை பற்றி எழுத திட்டமிட்டுள்ளேன்.
Labels: ஒப்பனிங் சீன்..
10 Comments:
வா(வ்)ழ்த்துகள் நண்பா!
முதல் பதிவு ரொம்ப சுவாரஸ்யம்.
ஆனா என்னால எழுத வர்றேங்கறீங்களே அத நெனைச்சா அழுவாச்சி அழுவாச்சியா வருது!
மிக்க நன்றி பரிசல் அண்ணா..
பரிசல்காரன் said...
வா(வ்)ழ்த்துகள் நண்பா!
முதல் பதிவு ரொம்ப சுவாரஸ்யம்.
ஆனா என்னால எழுத வர்றேங்கறீங்களே அத நெனைச்சா அழுவாச்சி அழுவாச்சியா வருது.!
// ரிப்பீட்டு.!
என்ன பரிசலையும் மெயில் போட்டு கூப்பிட்டீங்களா? இப்பிடித்தான் ஆரம்பிக்கும் இந்த போதை. உங்களுக்கு தகுதியிருக்கோ இல்லையோ.. இருந்தா எங்க ரெண்டு பேரு உதவியில்லாமயே மேல வந்திருவீங்க.! இல்லன்னா ஹிஹி.. ஒண்ணும் சொல்றதுக்கில்ல..
அண்ணன் பரிசல் பதிவுகள்ல விளம்பரம் போட்டுதான் நானும் இந்த அளவுல முன்னேறியிருக்கேன்.. நீங்களும் நல்லா வருவீங்க.!
எப்பூடி போற போக்குல அண்ணன் பரிசலுக்கு ஐஸ் வச்சேன் பாத்தீங்களா.! இதெல்லாம் பதிவுலெ சாதாரணமப்பா.!!!!
இப்பதான் உரையாடல் முடிவுகள் வந்து களேபரம் நடந்துக்கிட்டிருக்குது. நாங்க ரெண்டு பேரும் பல்பு வாங்கினவங்க.. வேற யாராவது சிக்குறாங்களா பாருங்க.. ஹிஹி.. !!!
உருப்புட முதல் யோசன.. வேர்ட் வெரிபிகேஷன தூக்குங்க..
ரெம்ப நன்றி ஆதி அண்ணா..
//அண்ணன் பரிசல் பதிவுகள்ல விளம்பரம் போட்டுதான் நானும் இந்த அளவுல முன்னேறியிருக்கேன்.. நீங்களும் நல்லா வருவீங்க.!//
உங்கள் வார்த்தை அப்படியே மெய்ப்பட வேண்டுகிறேன்..
ஹி ஹி.. அப்பறம், ஐஸ் எல்லாம் இல்ல.. உண்மையிலேயே உங்க ரெண்டு பேரோட பதிவுகளை நான் மிகவும் விரும்பி படித்திருக்கிறேன்.. அதனால்தான் உங்கள் இருவரையும் பற்றி குறிப்பிட்டிருக்கிறேன்..
ஆதி அண்ணா, வேர்ட் வெரிபிகேஷன தூக்கிட்டேன்.. நம்ம கடைக்கு வர்ற நாலு பேரும் இதனால போய்ட கூடாது பார்த்தீங்களா..
குறிப்பிட்டமைக்கு நன்றி..
வாங்க, கலக்குங்க!
அட முதல் பதிவிலே பரிசல், ஆதி, சுந்தர்ன்னு பெரிய தலைங்க எல்லாம் வந்திருக்காங்க.. அடுத்த கட்ட ஆட்களில் நான் ஆஜர் சார்..
@ஜ்யோவ்ராம் சுந்தர் - ரெம்ப நன்றி'ணா.. கண்டிப்பா கலக்கலாம் - என்றும் உங்கள் ஆதரவுடன்..
//
@கார்க்கி - வந்ததற்கு மிக்க நன்றி.. எனக்கு நீங்க எல்லாருமே பெரிய தலைங்க தான்'ணா.. என்னோட எல்லாப் பதிவுக்கும் வந்து உங்க கருத்த சொல்லணும்.
பரிசல் மாதிரி எழுதாம பரிசல் பேர காப்பாத்துங்க!
இரண்டாம் வாழ்த்து!
Post a Comment
எவ்வளவோ பண்றீங்க.. இதப் பண்ண மாட்டீங்களா??
Subscribe to Post Comments [Atom]
<< Home