Thursday, August 20, 2009

என்னை வாழ வைத்துக்கொண்டிருக்கும் திரு. இளையதளபதி விஜய் அவர்களுக்கு.. Cont..


------------------------------------------------------------------------------------------------------
என் வாழ்க்கைப் பயணத்தின் ஒரு முக்கியமான திருப்புமுனையைப் பற்றி எழுத நினைத்து, அதனுள் என் வாழ்க்கைப் படகின் துடுப்ப்பாகிய அண்ணன் விஜய்யையும் சேர்த்து போய்க்கொண்டிருக்கும் இவ்வேளையில், எனக்குத் தொடர்ந்து ஊக்கமளித்துக்கொண்டிருக்கும் வலைக் கடலின் பதிவுத் துடுப்பாகிய அண்ணன் பரிசலுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்..
------------------------------------------------------------------------------------------------------

ஒரு விஷயத்த நோட் பண்ணுணீங்களா? விஜய்க்கு மட்டுமே யூஸ் பண்ணுன ப்ளூ கலர் இப்ப நம்ம அண்ணனுக்கும்.. :))சரி சரி.. இனி ஓவர் டு நம்ம டாப்பிக்..

Technology வளராமல் இருந்திருந்தால் உலகம் எதை இழந்திருக்குமோ - அது எனக்குத் தெரியவில்லை. அனால் அது வளர்ந்ததினால் பாதிக்கப்பட்ட பல பேரில் நானும் ஒருவன்.. அதன் ஒரு வடிவமான மொபைல் தான் என் வாழ்விற்கு வேறு வடிவம் கொடுக்கக் காரணமாயிற்று..

எங்கள் கல்லூரியில் ஒரு சில Departments கல்லூரியின் Main Block'ஐ விட்டு கொஞ்சம் தொலைவில் இருக்கும்.. அதிலிருக்கும் ஒன்று நான் படிப்பது, ஒன்று அவள் படிப்பது.. அப்போது நான் Final Year. அவள் Third Year.. நான் Hosteler, அவள் Day Scholar..

அது ஒரு அக்டோபர் மாதத்து மழை நாள்.. எங்கள் கல்லூரி கேரளாவிற்கு பக்கம் என்பதால் சச்சின் படத்துல வர்ற மாதிரி தான்.. எப்பவுமே ஜில்'ன்னு இருக்கும்.. அதுவும் மழைக் காலம்னா கேட்கவே வேண்டம்.. எப்பவும் போல ஜம்ம்ன்னு டிரஸ் பண்ணிட்டு காலேஜ்'க்கு நடந்து கொண்டிருந்தோம்..


"குடையில்லா நேரம் பார்த்துக் கொட்டிச் செல்லும் மழையைப் போல

அழகாலே என்னை நனைத்து இதுதான் காதல் என்றாளே"

- மனதிற்குள் ஜெனிலியாவுடன் பாடிக் கொண்டிருந்தேன்.


அப்போது ஒரு குரல் - 'Haai'..

அட, அது அவள் தான்.. அவளை அங்கு நான் கொஞ்சம் கூட எதிபார்க்கவில்லை..

சட்டென்று பாடலில் ஜெனீலியாவிற்கு பதில் அவள் உருவம் தெரிய ஆரம்பித்தது..

நான் பதிலுக்கு 'Hi' சொல்லுவதற்குள் என் நண்பனொருவன்..

'யாருடா மச்சான், உன் தங்கச்சியா?' என்று அவளுக்கும் கேட்கும்படி என்னிடம் கேட்டான்..

'Cha cha.. என் பிரென்ட்'டா'.. நீங்க முன்னாடி போய்கிட்டிருங்க, நான் பேசிட்டே வந்துடுறேன்'டா..

எனக்கு அன்று நல்ல நேரம் என்று தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.. யாரும் எந்த சேட்டையும் பண்ணாமல் அமைதியாய்க் கிளம்பினர்..

எப்பவுமே இந்த டைம்க்கு தான் போவீங்களா? - அவள்..

ஆமா, ஆனால் நான் உன்னை இந்த நேரத்திற்கு பார்த்ததே இல்லையே..

இன்னைக்கு பஸ் லேட் ஆயிடுச்சு.. இல்லனா ஒரு பத்து நிமிஷம் முன்னாடியே போய்டுவேன்.. நீங்க Hosteler தான? கொஞ்சம் முன்னாடியே கிளம்பக்கூடதா? ஏன் இப்படி கடைசி நிமிஷத்துல tension'a போகனும்?

லேட் ஆயிடுச்சுன்னா அப்படியே திரும்பி Hostel போயிடலாம்னுதான் என்று மனதிற்குள் நினைத்தாலும் 'இல்லேங்க, எப்பவுமே சீக்கிரமா போய்டுவேன்.. இன்னைக்கு தான் லேட் ஆயிடுச்சு'..

ஓஹோ.. அப்ப நாளைக்கு சீக்கரமா வந்துடுங்க..

அவள் கையில் வைத்திருந்த மொபைலைப் பார்த்தேன்.. உங்க Department Professor's எல்லாம் மொபைல் வச்சிருந்தா ஒன்னும் சொல்றதில்லையா.. (மனதிற்குள் - நம்பர் கெடச்சா நல்லா இருக்குமே..)

ஹ்ம்ம்.. அத ஏன் கேட்குறீங்க.. இதோட ரெண்டு தடவ மாட்டிகிட்டேன்.. உங்க செல் நம்பர் என்ன?

அட, நான் மனதிற்குள் நினைத்து இவளுக்கு கேட்டு விட்டதா? அவள் மிகவும் சாதாரணமாகக் கேட்டாள். எனக்குத்தான் இதயம் வேகமாகத் துடித்தது..

நோட் பண்ணிக்கோ என்று என் நம்பரைக் கொடுத்துவிட்டு, 'அதுக்கு ஒரு Missed கால் குடுத்துடு' என்றேன். இதற்குள் நாங்கள் எங்கள் கிளாஸ்'ஐ நெருங்கியிருந்தோம்..

''காதல் தான் வாழ்விலே ஏணி'டா..
ஆதலால் காதல் செய் மானிடா..''
--அசரீரி போல் மனதிற்குள் ஓடிக்கொண்டே இருந்தது..

மறுநாள்.. காலை எட்டு மணிக்கே நான் கிளம்பிவிட்டேன்..

அதே நண்பன் மறுபடியும் - எங்கடா கிளம்பிட்டே?

காலேஜ்'க்கு போறேண்டா..

அப்பறம் நாங்கெல்லாம் எங்க போகப் போறோம்? இரு, இருபது நிமிஷம் கழிச்சு போகலாம்..

இல்லடா, Department'ல ஒரு சின்ன வேலை இருக்கு..

ஓஹோ.. சரி சரி, போங்க சார் என்று சிரித்துக்கொண்டே கூறினான்.. இவன் வில்லங்கமானவன். ஏன்டா சிரிக்குற என்று கேட்டு நானே பிரச்சனையை வளர்த்துக்கொள்ள விரும்பாமல் 'சரிடா' என்று கூறிவிட்டு கிளம்பினேன்..

அன்று ஆரம்பித்தது.. லஞ்ச் பிரேக், கான்டீன், மிஸ்டு கால், மிட் நைட் கால், SMS என்று எங்களின் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போனது..இது போதாதென்று விஜய்'யும் தன் பங்கிற்கு அவரைப் பற்றி பேசச் செய்து காதலுக்குத் தான் எப்போதும் நண்பன் என்று மற்றுமொருமுறை எனக்கு நினைவுப்படுத்தினார்..

இப்படியே ஒரு வருடம் ஓடியது.. இதற்குள் நாங்கள் இருவரும் தனியே வெளியே செல்லும் அளவிற்க்கு எங்கள் நெருக்கம் கூடியிருந்தது..

இந்தக் கால கட்டத்தில் நானும் அடிக்கடி 'யூத்' விஜய் போல நடு இரவில் தூக்கம் வராமல் தவித்தாலும் இவன் மீது காலைப் போட்டு 'டேய், தூங்கிட்டியாடா' என்று கேட்க முடியாது.. அப்படியே என்றாவது ஒரு நாள் தப்பித் தவறி கேட்டுவிட்டால் என் மண்டை உடைந்து அவளை ஒரு சில மாதங்களுக்கு பார்க்க முடியாமல் போகும் அபயாம் உள்ளதால் நானே திரும்பித் திரும்பிப் படுத்து எப்பாடுபட்டாவது தூங்கிவிடுவேன்.

Einstine சொல்லிய 'Theory of Relativity' போல நாட்கள் அவளால் நிமிடங்களாய்ப் பறந்தது.. இந்த ஒரு வருடத்தில் நாங்கள் பார்க்கமலோ பேசாமலோ இருந்த நாட்களை எண்ணி விடலாம்..

இப்படியே போய்க்கொண்டிருந்த வேளையில் நான் கல்லூரியை விட்டுக் கிளம்பும் நாளும் வந்தது.. அப்போதெல்லாம் நாங்கள் பேசி முடிக்க எப்படியும் இரவு இரண்டு மணியாவது ஆகிவிடும்.. அந்த ஒவ்வொரு நாட்களும் அவள் என்னுடன் அழாமல் பேசியதேயில்லை.. உங்களுக்காக அழுவதற்கு ஒருவர் இருந்தால் கண்டிப்பாக என் நிலைமை உங்களுக்குப் புரியும்..

நான் கல்லூரியை விட்டுப் போவதற்கு சரியாக மூன்று நாட்களுக்கு முன்னால்.. எப்பவும் போல் நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். அன்று அவளது பேச்சில் என்றுமில்லாத ஒரு வித தயக்கத்தை என்னால் உணர முடிந்தது.. அப்போது தான் நான் சிறிதும் எதிர்பார்க்காத அந்தக் கேள்வியை கேட்டாள்..

நான் ஒன்னு கேட்டா மாட்டேன்னு சொல்லக் கூடாது..

நீ சொல்லி நான் என்ன மாட்டேன்னு சொல்லிருக்கேன்?

நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?

திடீர் என ஒரு மின்னல் என் நெஞ்சில் பாய்ந்ததைப் போல் இருந்தது..

சரியா கேட்கல'டா என்றேன்..

நாம கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்டேன்..

என்ன திடீர்னு இப்படி கேட்குற?

ரெம்ப நாளா கேட்கனும்னு நெனச்சேன்.. இப்ப தான் கேட்க தைரியம் வந்துச்சு..

நான் ஏற்கனவே உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டதாத் தான் நெனச்சுட்டு இருக்கேன்.. இது கொஞ்சம் பழைய dialogue தான் என்றாலும், சத்தியமாக நான் சொன்னது இது தான்.. ஏதோ ஒரு வேகத்தில் இதை நான் சொல்லிவிட்டாலும் எனக்கு இதயம் துடித்த வேகக்திற்கு ஒரு வேளை அது நின்று விடும் போல் இருந்தது.. அடுத்த ஒருசில நிமிடங்கள் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவே இல்லை..

அவளே அந்த மௌனத்தைக் கலைத்தாள்.. 'சரி, நாளைக்குப் பேசலாம்'..

ஏதாவது தப்பாக நினைத்து விட்டாளோ? ச்சே.. அப்படி எல்லாம் இருக்காது.. மனது நிலை கொள்ளாமல் தவித்தது..

கொஞ்ச நேரம் பேசாமல் இருந்தால் நன்றாக இருக்கும் போல் தோன்றியது..

'சரி.. காலையில கூப்பிடுறேன்'..

அன்று இரவு முழுவதும் நான் தூங்கவே இல்லை.. அவளும் தூங்கி இருக்க மாட்டாள் என்று நினைக்கிறேன்.. மறுநாள் காலை எட்டு மணி வரைக்கும் கூப்பிடவில்லை.. அன்று மதியம் அவளிடமிரிந்து SMS.. 'கேன்டீன்'ல சாப்பிடலாம்'.. சரி என்று பதில் அனுப்பிவிட்டு கேன்டீனுக்குச் சென்றேன்.. எனக்கு முன் அங்கு இருந்தாள் அவள்.. அந்த ஒரு வருடத்தில் ஒரு நாள் கூட அவள் முகத்தில் நான் பார்க்காத ஒரு வெட்கத்தை அன்று தான் முதன் முறையாகப் பார்த்தேன்.. அது அவளை மேலும் அழகாகக் காட்டியது.. அவளைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போலிருந்தது..

காலம் நம்மைக் கடந்து போய்க்கொண்டு தான் இருக்கிறது என்பது நான் கிளம்பும் நாள் வந்த போதுதான் தெரிந்தது.. அன்று காலையிலிருந்தே அவளுடன் தான் இருந்தேன். மதியம் என் பெற்றோர் வருவதாக இருந்தது.. நேரம் ஓடிக்கொண்டே இருந்தது.. ஓரிரு வார்த்தைகள் மட்டுமே பேசிக் கொண்டோம்.. அவள் கை என் கையைப் பிடித்தே இருந்தது.. மணி 11 இருக்கையில் என் அப்பாவிடமிருந்து அழைப்பு.. 'கோயம்புத்தூர் வந்துட்டோம்டா.. இன்னும் அரை மணி நேரத்தில் வந்துவிடுவோம்'..

யாரு?

அப்பா..

என்ன சொன்னாங்க?

இன்னும் அரை மணி நேரத்துல்ல வந்துடுவாங்களாம்..

Arun, 'I Love you'.. என் கையை இருக்க பற்றினாள்..

Me too.. சொல்வதற்குள் எனக்கு அழுகையே வந்து விடும் போல் இருந்தது..

அதன் பின் எதுவும் பெரிதாக பேசிக்கொள்ளவில்லை.. அவள் அடிக்கடி அவள் கண்களைத் துடைத்துக்கொண்டிருந்தாள்..

என் பெற்றோரும் வந்து விட்டனர்.. தெரிந்த நண்பர்களிடம் பேசிக்கொண்டும் தெரியாதவர்களை அறிமுகப்படுத்திக்கொண்டும் இருந்தோம்..

அவளைக் காட்டி, 'இது .....'

அவளும் 'Hai Aunty, Hai Uncle' என்று சொல்லி ஏதோ பேசிக்கொண்டிருந்தாள். நான் என் ரூமிற்குள் சென்று என் Luggage'ஐ எடுத்து காரில் வைக்க ஆரம்பித்தேன்.. கொஞ்ச நேரத்தில் என் அம்மாவிடம் நன்கு ஒட்டிக்கொண்டாள்.. எல்லாம் முடிந்து நாங்கள் கிளம்ப ஆரம்பித்தோம்.. முகம் வாடி இருந்தாலும் சிரித்தபடியே என்னை வழியனுப்பினாள்..

காரில் பாட்டு ஓடிக்கொண்டிருந்தது..

''பிரிவொன்றை சந்தித்தேன் முதன் முதல் நேற்று..
நுரையீரல் தீண்டாமல் திரும்புது காற்று.."

இது நடந்து இரண்டு வருடங்கள் ஓடி விட்டது.. நானும் சென்னை, புனே என்று வேலை நிமித்தமாக இடம் மாறிக்கொண்டே இருந்தேன்.. அனால் எங்களுக்குள் இருந்த காதலுக்கு இந்த தூர இடைவெளி ஒரு பிரச்சனையாக இருந்ததே இல்ல.. அதே Phone calls, அதே SMS..

அந்த இரண்டு வருடங்கள் என்னையும் அவளையும் நன்றாக மாற்றி இருந்தது.. என் மேல் அதிக உரிமை எடுத்துக் கொள்வாள்.. அவளைப் பற்றி நினைக்க எனக்கு 24 மணி நேரம் போதாமல் போனது. அவளைத் தவிர எதிலுமே மனம் ஒருமுகப்பட மறுத்தது.. ஆனால் இதக் கால கட்டத்தில் அடிக்கடி சின்னச் சின்னச் சண்டைகள் வர ஆரம்பித்தன..

நாட்கள் போய்க்கொண்டே இருந்தது.. அவளுக்கு வீட்டில் கல்யாணத்தைப் பற்றி பேச ஆரம்பித்தார்கள்.. எவ்வளவு நாட்கள் தான் இப்படியே இருப்பது என்று நானும் என் வீட்டில் சொல்ல முடிவெடுத்தேன்.. எப்பவும் போல என் அக்காவிடமே ஆரம்பிக்கலாம் என்று கொஞ்சம் கொஞ்சமாக சொல்ல ஆரம்பித்தேன்.. முதலில் எல்லா வீடுகளிலும் நடப்பதைப் போல திட்டு, ஆர்ப்பாட்டம் என இருந்தாலும், இறுதில் ஒரு வழியாக சமாதானப் படுத்தினேன்.. ஒரு வேளை, இவனையும் கூட ஒரு பொண்ணு விரும்புதேன்னு ஆச்சர்யப்பட்டு தான் என் அக்கா சமாதானம் ஆனாரோ தெரியவில்லை..

ஒரு வழியாக அக்காவை சம்மதிக்க வைத்தாகி விட்டது.. அடுத்த கட்டமாக அக்காவை தூதனுப்பி அத்தானிடமும் பேசச் சொன்னேன்.. அவரின் சம்மதமும் நான் எதிர்பார்த்ததை விட எளிதில் கிடைத்தது.. முதல் கட்ட பேச்சு வார்த்தைகள் சுமுகமாக முடிந்த நிலையில் என் பெற்றோரிடம் இதைச் சரியான நேரத்தில் சரியான விதத்தில் சொல்ல காத்துக் கொண்டிருந்த நேரமது.. இந்த நேரத்தில் தான் அவளுக்கு வேலை காரணமாக மைசூர் செல்ல வேண்டி வந்தது..

எப்போதும் போல் பஸ் பயணத்தில் ஆரம்பித்து, ஊர் போய்ச் சேர்ந்து மறுநாள் காலை வேலைக்குச் செல்லும் வரை என்னோடு பேசிக்கொண்டிருந்தவளிடம் எந்ஒரு மாற்றத்தையும் அறியாத நான் அன்றிரவு தான் முதல் முறையாக ஒரு வித்யாசத்தை உணர்ந்தேன்..

என் பெற்றோரிடம் எப்படி எடுத்துச் சொல்லி சம்மதிக்க வைப்பது என்று நான் கணக்குப் போட்டுக் கொண்டிருக்க விதியோ என்னை வைத்து வேறு கணக்கு போட்டுக்கொண்டு இருந்தது..தொடரும்..

Labels:

24 Comments:

Blogger எம்.எம்.அப்துல்லா said...

//தொடரும் //

ஐயாம் வெயிட்டிங்.

August 21, 2009 at 4:36 PM  
Blogger கார்க்கிபவா said...

அட உத்யா பாட்டு கூட ஞாபகம் இருக்கா? சூப்பர்..

வெயிட்டிங் வெயிட்டிங்

August 21, 2009 at 6:30 PM  
Blogger ப்ரியமுடன் வசந்த் said...

கலக்கல் மாமு....

அந்த காதல் சொல்ற இடத்துல சரியான ஹார்ட் அட்டாக் வந்துருக்கணுமே

அடுத்த பார்ட்டுக்காக வெயிட்டிங்...

சீக்கிரம் ஆமா சொல்லிப்புட்டேன்......

August 21, 2009 at 8:26 PM  
Blogger குசும்பன் said...

//அப்போது ஒரு குரல் - 'Haai'.. //

அட பேசும் பொழுதே ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா, ரொம்ப மக்கு பிகரோ:)

August 21, 2009 at 10:06 PM  
Blogger இரவுப்பறவை said...

எல்லாம் நல்லாத்தான் போகுது....
அந்த லேபிள் மட்டும் தான் சகிக்கல..

August 22, 2009 at 12:20 AM  
Blogger கார்ல்ஸ்பெர்க் said...

@எம்.எம்.அப்துல்லா
-அண்ணா, மிக்க நன்றி..
விரைவில் முடித்துவிடுவேன்..

August 22, 2009 at 5:32 AM  
Blogger கார்ல்ஸ்பெர்க் said...

@கார்க்கி
-அண்ணா, நம்மளே மறந்துட்டா எப்படி?
அடுத்த பதிவில் முடித்துவிடுவேன்..

August 22, 2009 at 5:34 AM  
Blogger கார்ல்ஸ்பெர்க் said...

@பிரியமுடன்...வசந்த்
//அந்த காதல் சொல்ற இடத்துல சரியான ஹார்ட் அட்டாக் வந்துருக்கணுமே//

-அண்ணா, சத்தியமாக அதை எழுத்தினில் விவரித்து விட முடியாது.. அனுபவித்துப் பார்த்தால்தான் தெரியும்..

//அடுத்த பார்ட்டுக்காக வெயிட்டிங்...

சீக்கிரம் ஆமா சொல்லிப்புட்டேன்......//

-முடிந்த வரை சீக்கிரமாக முடித்து விடுகிறேன்..

August 22, 2009 at 5:38 AM  
Blogger கார்ல்ஸ்பெர்க் said...

@குசும்பன்
//அட பேசும் பொழுதே ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா//

-அண்ணா, Excitement'a காட்டத் தான் ரெண்டு 'a' சேர்த்திருக்கிறேன்..

//ரொம்ப மக்கு பிகரோ//

-அவளைப் பற்றி சொல்லும் நிலைமையில் இப்போது நான் இல்லை :(

August 22, 2009 at 5:43 AM  
Blogger கார்ல்ஸ்பெர்க் said...

@இரவுப்பறவை
//எல்லாம் நல்லாத்தான் போகுது//

-மிக்க நன்றி..

August 22, 2009 at 5:44 AM  
Blogger ஊர்சுற்றி said...

கலக்கல். நமக்குத்தான் இப்படி ஒண்ணும் நடக்கல!

பெருமூச்சு விட்டுக்க வேண்டியதுதான். தல நீங்க சந்தோஷமா முடிப்பீங்கன்னு நினைக்கிறேன். சேரன் மாதிரி சொதப்பிறாதீங்க பாஸ்.

//ஒரு வேளை, இவனையும் கூட ஒரு பொண்ணு விரும்புதேன்னு ஆச்சர்யப்பட்டு தான் என் அக்கா சமாதானம் ஆனாரோ தெரியவில்லை.// :)))

அந்த முதல்கட்டப் பேச்சுவார்த்தை ங்கற வார்த்தைப் பிரயோகம் எனக்கு ரொம்ப பிடிச்சிது.

August 22, 2009 at 11:36 AM  
Blogger கார்ல்ஸ்பெர்க் said...

@ஊர்சுற்றி
//தல நீங்க சந்தோஷமா முடிப்பீங்கன்னு நினைக்கிறேன். சேரன் மாதிரி சொதப்பிறாதீங்க பாஸ்//

-அண்ணா,என் வாழ்க்கையில் உண்மையிலேயே நடந்ததைப் பற்றி எழுதுறேன்.. எனக்குத் தெரிஞ்சு சினிமால மட்டும் தான் சுபம் போட்டு முடிப்பாங்க.. என் கதை அப்படி இல்லனா.. அதுக்காக படிக்காம போயிடாதீங்க..

//அந்த முதல்கட்டப் பேச்சுவார்த்தை ங்கற வார்த்தைப் பிரயோகம் எனக்கு ரொம்ப பிடிச்சிது//

-நன்றி :)

August 22, 2009 at 2:40 PM  
Blogger வால்பையன் said...

//வலைக் கடலின் பதிவுத் துடுப்பாகிய அண்ணன் பரிசலுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்..//

திமிங்கலத்தை துடுப்பு என்று அடைமொழி வைத்து அழைப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்!

August 25, 2009 at 12:02 AM  
Blogger வால்பையன் said...

//விஜய்க்கு மட்டுமே யூஸ் பண்ணுன ப்ளூ கலர் இப்ப நம்ம அண்ணனுக்கும்.//

இவருக்கும் டாக்டர் பட்டம் கொடுத்துட்டாங்களா?

August 25, 2009 at 12:03 AM  
Blogger வால்பையன் said...

//உங்களுக்காக அழுவதற்கு ஒருவர் இருந்தால் கண்டிப்பாக என் நிலைமை உங்களுக்குப் புரியும்..//

நிறைய பேர் அழுவாங்க!
ஆனந்த கண்ணீர் சந்தோசத்துல!

August 25, 2009 at 12:05 AM  
Blogger வால்பையன் said...

படா சஸ்பென்ஸா இருக்குது!

என்ன ஆச்சுன்னு தெரிந்து கொள்ள ஆர்வமா இருக்கு!

August 25, 2009 at 12:09 AM  
Blogger Unknown said...

அச்சச்சோ என்ன ஆச்சு??? சீக்கிரம் அடுத்த பதிவு போடுங்க...

August 25, 2009 at 5:39 AM  
Blogger Thamira said...

தவறாகக் கொள்ளமாட்டீர்கள் என்றால் உண்மையைச் சொல்லவா? படித்து முடிப்பதற்குள் 3 முறை கொட்டாவி விட்டுவிட்டேன். இப்போதான் புரிகிறது, என் காதல் கதையையெல்லாம் எழுதினால் பலரும் தூங்கியே விடுவார்கள் என்று.

உங்கள் உணர்வுகள் புரிகிறது. காயப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் எனக்கில்லை. இருப்பினும் எனக்த்கு தோன்றியதைக் கூறினேன். அவரவர் காதல் அவரவருக்கு மிக அற்புதமானதுதான். சுவாரசியமானதுதான்.! தொடர்க..

மேலும் இதில் எதுக்கு விஜய் என்பதும் எனக்கு புரியவேயில்லை.!!

August 25, 2009 at 10:57 AM  
Blogger கார்ல்ஸ்பெர்க் said...

@வால்பையன்
//திமிங்கலத்தை துடுப்பு என்று அடைமொழி வைத்து அழைப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்!//

-ஒரு Rhymingஆ இருக்கட்டுமேன்னு தான் அப்படி சொல்லிட்டேன் தல

//இவருக்கும் டாக்டர் பட்டம் கொடுத்துட்டாங்களா?//

-நம்ம ரெண்டு பெரும் எதுக்கு இருக்கோம்? குடுத்துடுவோம், அவ்வளவு தான :)

//படா சஸ்பென்ஸா இருக்குது!//

-ரெம்ப நன்றி..

August 25, 2009 at 11:32 AM  
Blogger கார்ல்ஸ்பெர்க் said...

@ஸ்ரீமதி
//சீக்கிரம் அடுத்த பதிவு போடுங்க//

-சந்தோஷமா சொல்ற மாதிரி ஒன்னும் நடக்கலங்க.. எழுத எனக்கு கஷ்டமா இருக்கு.. வீடு வேற மாத்திட்டு இருக்கேன்.. கூடிய சீக்கிரமா முடிச்சுடுறேன் :)

August 25, 2009 at 11:35 AM  
Blogger கார்ல்ஸ்பெர்க் said...

@ஆதிமூலகிருஷ்ணன்
ஆதி'ணா, நீங்க சொல்றத எல்லாம் வச்சு பார்த்தா உங்களுக்கு வயசாயிடுச்சுன்னு அப்பட்டமா தெரியுது'ணா..அதான் உங்களுக்கு Love Story'ஏ புடிக்க மாட்டேங்குது :)))

//தவறாகக் கொள்ளமாட்டீர்கள் என்றால் உண்மையைச் சொல்லவா?//
-கண்டிப்பாக இல்லை.. மனதில் பட்டதை அப்படியே சொல்லிடுங்க..

//படித்து முடிப்பதற்குள் 3 முறை கொட்டாவி விட்டுவிட்டேன்.//
-கதை வேகமாக போகும்படி எழுத கண்டிப்பாக முயற்சிக்கிறேன்..

//மேலும் இதில் எதுக்கு விஜய் என்பதும் எனக்கு புரியவேயில்லை//

-அதான் ஓபனிங்'லையே அண்ணன பத்தி நெறைய சொல்லிட்டேன்ல.. இந்த Part'ல கதைக்குள்ள போயிட்டதுனால பெருசா எதுவும் சொல்லல..

August 25, 2009 at 11:52 AM  
Blogger விக்னேஷ்வரி said...

விஜய்க்கு மட்டுமே யூஸ் பண்ணுன ப்ளூ கலர் இப்ப நம்ம அண்ணனுக்கும்.. :)) //

இனி பரிசலோட பதிவுகளும் down ஆகிடுமா....

"குடையில்லா நேரம் பார்த்துக் கொட்டிச் செல்லும் மழையைப் போல

அழகாலே என்னை நனைத்து இதுதான் காதல் என்றாளே"

- மனதிற்குள் ஜெனிலியாவுடன் பாடிக் கொண்டிருந்தேன். //

ரசித்துப் படித்தேன்.

அவள் மிகவும் சாதாரணமாகக் கேட்டாள். எனக்குத்தான் இதயம் வேகமாகத் துடித்தது.. //

:))))

நாங்கள் பேசி முடிக்க எப்படியும் இரவு இரண்டு மணியாவது ஆகிவிடும்.. //

அதை நாங்க அதிகாலைனு சொல்லுவோம்.

''பிரிவொன்றை சந்தித்தேன் முதன் முதல் நேற்று..
நுரையீரல் தீண்டாமல் திரும்புது காற்று.." //

இங்கே மட்டும் சம்பந்தமில்லாம பிரசாந்த் பாட்டு கொண்டு வந்ததை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

ஒரு வேளை, இவனையும் கூட ஒரு பொண்ணு விரும்புதேன்னு ஆச்சர்யப்பட்டு தான் என் அக்கா சமாதானம் ஆனாரோ தெரியவில்லை.. //

ஹாஹாஹா.....

கல்லூரி கால காதல் கதைகள் ஞாபகத்துக்கு வர வச்சுட்டீங்க. அழகா இருக்கு உங்க காதல். ஆனால், தொடருமில் என்ன திகிலோ.....

August 27, 2009 at 1:45 AM  
Blogger கார்ல்ஸ்பெர்க் said...

@விக்னேஷ்வரி

//இனி பரிசலோட பதிவுகளும் down ஆகிடுமா....//

-என்னங்க இப்படி சொல்லிட்டீங்க? நீங்க வேணும்னா பாருங்க, விஜய் மாதிரி ஒரு நாள் நம்ம பரிசல் அண்ணனும் CM ஆகத்தான் போறாரு..

//அதை நாங்க அதிகாலைனு சொல்லுவோம்//

-ஹி ஹி.. இருட்டா இருக்குற வரைக்கும் நமக்கு அது நைட் தான்..

//இங்கே மட்டும் சம்பந்தமில்லாம பிரசாந்த் பாட்டு கொண்டு வந்ததை வன்மையாகக் கண்டிக்கிறேன்.//

-Situation'க்கு best-suited'nu தோணிச்சு, அதான் :)


//தொடருமில் என்ன திகிலோ.....//

-அத எழுதுறதுக்கே மனசு வர மாட்டேன்குதுங்க. ஆனா கூடிய சீக்கிரமா எழுதிடுறேன்..


வருகை தந்ததற்கும், சொன்ன கருத்துகளுக்கும் மிக்க நன்றி..

August 27, 2009 at 4:16 AM  
Anonymous Anonymous said...

இன்னுமா எழுதி முடிக்கல ????

February 9, 2012 at 5:55 AM  

Post a Comment

எவ்வளவோ பண்றீங்க.. இதப் பண்ண மாட்டீங்களா??

Subscribe to Post Comments [Atom]

<< Home