தண்ணி பார்ட்டி' க்கு வாங்க..
ஓம் கார்ல்ஸ்பெர்காய நமஹா..
இதை எனது குடும்பத்தினரோ எனது நெருங்கிய சொந்தமோ படிக்க நேருமானால் முதலில் டிஸ்கி 1'ஐ படித்துவிட்டு மேலும் தொடரவும்..
மற்ற அனைவரும் டிஸ்கி 2'ஐ படித்துவிட்டு மேலும் தொடரவும்..
இனி, வாங்க.. தண்ணிக்குள்ள குதிக்கலாம்..
இந்த தண்ணி மேட்டர்'அ எவன் முதல்ல கண்டுபுடிச்சானோ அவனுக்கு கோயிலே கட்டலாம்ங்க.. தண்ணிய போட்டுட்டு ஏதோ உளருறேன்'னு தப்பா நெனச்சுக்காதீங்க..மேட்டர் என்னன்னா, உலகத்துல ஓவராலா பார்த்தா தண்ணி தான் எல்லாமே.. டாஸ்மாக்'ல இருந்து தாஜ் வரைக்கும்.. இவளவு ஏன், இங்க 'யு கே' ல தண்ணி இல்லாத வீட்ட பார்கவே முடியாதுங்க.. சோ, இவ்வளவு தூரம் ரீச் ஆகுரதுன்ன சும்மாவா.. அதான் கோயில் மேட்டர் சட்டென்'ஆ ஸ்டிரைக் ஆச்சு.. என்னதான் டாஸ்மாக்'ல எப்பவும் கூட்டம் கியூ'ல நின்னாலும், டாப்'ஆ தண்ணி அடிக்குற முதல் பதினைந்து நாட்டுக்குள்ள இந்தியா இன்னும் வரலீங்க(2008 நிலவரப்படி).. ஆனா 'பாய்ஸ்' மங்களம் சார் சொல்ற மாதிரி தனித் தனி அப்ரோச்'ல எறங்குனா கண்டிப்பா நம்ம ஆதி'ணா, வால்பையன் தான் டாப் டூ அப்படிங்கறதுல எந்த வித சந்தேகமும் இல்ல..
நமக்கு பீர் தவிர வேற எதுமே தெரியாதுங்க.. அதனால பீர்'அ பத்தி நமக்கு தெரிஞ்ச ரெண்டு மூணு விஷயத்த சொல்லிடுறேன்.
உலகத்தில் உள்ள அதிமேதாவிகள் கண்டுபிடித்தவை..
1. ஆக்ஷிடேஷன் (இதுக்கு மருத்துவ ரீதியா தமிழ்'ல சொல்லணும்னா 'உயிர்வளியேற்றம்'. ஏனோ இப்ப எனக்கு சிவாஜி'ல ரஜினி காந்திமதிக்கு அவரோட வேலைய தமிழ்'ல சொல்ற காமெடி ஞயாபகத்துக்கு வருது) மூலமாக நமது உடலில் உற்பத்தியாகும் ப்ரீ ராடிகல்ஸ்'ஐ தடுப்பதில் பீர் முக்கிய பங்கு வகிக்கிறதாம்.. இதனால் கான்சர் போன்ற வியாதிகள் நம்மை அண்டாமல் பாதுகாக்கிறது..
2. கேடராக்ட் எனப்படும் கண் சம்மந்தப்பட்ட நோயை வராமல் தடுக்கிறது..
3. இதிலிருக்கும் வைட்டமின் B-6, 'ஹோமொசிஸ்டைன்' என்ற கெமிக்கல் நமது உடலில் உண்டாவதைத் தடுக்க பெரிதும் உதவுகின்றது. இதனால் இருதயம் சம்மந்தப்பட்ட நோய்களில் இருந்து நம்மைக் காக்கிறது..
4. முக்கியமாக - இதில் கொழுப்போ கொலஸ்ட்டிராலோ கிடையவே கிடையாது..
5. மேலும் நிம்மதியாக தூங்குவதற்கும் இது வழி வகுக்கிறது..
6. ஆஸ்திரியாவில் நடந்த ஒரு ஆராய்ச்சியில் பீரிலுள்ள 'ஹோப்ஸ்' என்ற பொருள் வயது முதிர்ச்சியை தடுக்கிறது என்று கண்டுபிடித்துள்ளனர்(வயதான பதிவர்கள் கவனிக்க)..
கீழ உள்ளதெல்லாம் நானே கண்டுபுடிச்சது..
1. இதுல பெரிய பிளஸ் என்னன்னா எவ்வளவு தான் குடிச்சாலும் பிளாட் ஆகி எங்கயும் கீழே விழுந்து மண்ண டேஸ்டு பண்ற வேலை இருக்காது..
2. அப்பறமா ஹார்டு அடிச்சா வர்ற பிரச்சன.. அதான் இந்த கிட்னி சட்னி ஆகுறது, கண்ணு அவிஞ்சு போறது, நுரைஈறல் நுரை தள்றது.. இந்த மாதிரி எதுவும் நடந்துடுமோனு பயப்படாம அடிக்கலாம்..
3. ரெம்ப முக்கியமா.. ஒரு வேள தப்பி தவறி வீட்டுக்கு தெரிஞ்சு பெரிய பிரச்சனை ஆனா கூட பைனல்'ஆ 'சரி, பீர் தான.. வேற ஒன்னும் பெருசா கேட்டுப் போகலலேல.. விடு விடு' அப்படினு வீட்ல யாரவது சொல்ல வாய்ப்பு இருக்கு.. (நல்லா நோட் பண்ணுங்கப்பா.. வாய்ப்பு இருக்குனுதான் சொல்றேன்)
இதுல என்ன ஒரே ஒரு பிரச்சனை'னா உங்க தொப்பை பல மடங்கு பெரிதாகுவதற்கு வாய்புகள் அதிகம்.. பட் அதையெல்லாம் ஜிம்'ல போய் கரெக்ட் பண்ணிக்கலாம் பாஸ்..
பைனல்'ஆ..
சரிவிகித அளவில் குடித்து வந்தால் அது நமது உலில் 'செரோடொனின்' எனப்படும் ''ஹப்பினஸ்'' ஹார்மோன்'ஐ கூட்டுகின்றதாம்.. ஏன்பா, சந்தோசமா இருக்கணும்னு யாருதான் நெனைக்க மாட்டாங்க?
'A Thing of Beauty is a Joy Forever' -- இது ஜான் கீட்ஸ் சொன்னது..
'A Mug of Beer is a Joy Forever' -- இதான் நான் சொல்றது..
அப்பறம் இன்னும் எதுக்கு வெய்ட்டிங்?? ரெடி ஜூட்..
டிஸ்கி 1 : இது முற்றிலும் கற்பனையே. இதற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. தப்பித் தவறி கூட என்னை சந்தேகப்பட வேண்டம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது (ஊரு நம்மள நம்புறதுக்கு என்னலாம் பண்ண வேண்டி இருக்கு)..
டிஸ்கி 2 : இந்தப் பதிவை படித்துவிட்டு நீங்கள் ஏதேனும் முடிவெடுக்க நேருமானால் அதற்க்கு நான் பொறுப்பல்ல..
Labels: கார்ல்ஸ்பெர்க் ஸ்பெஷல்..
19 Comments:
பீரடித்து வாழ்வாரே வாழ்வார்
மற்றோரெல்லாம் ஹாட்டித்து ”மேல்” செல்பவர்.
//1. இதுல பெரிய பிளஸ் என்னன்னா எவ்வளவு தான் குடிச்சாலும் பிளாட் ஆகி எங்கயும் கீழே விழுந்து மண்ண டேஸ்டு பண்ற வேலை இருக்காது.. //
ஹலோ சும்மா பொய்யான தகவலை சபைக்கு தரக்கூடாது, இங்கு ஷார்ஜாவில் ஒரு நண்பர் இருக்கிறார், ஒரு பீர் குடிச்சுட்டு மட்டை ஆகி கீழே விழுந்து அப்படியே தூங்கிவிட்டார், மற்ற நண்பர்கள் தொடர்ந்து விடியவிடிய குடிச்சுட்டு மட்டை ஆனார்கள். அனைவரும் பதிவுலக நண்பர்கள் தான்:))))
வாழ்த்துக்கள் அருண். லேசான நகைச்சுவை கலந்த நடை அற்புதமாய் இருக்கிறது.நிறைய எழுதுங்கள்
@Cable Sankar - வந்ததற்கு மிக்க நன்றி. தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
//
@ குசும்பன் - அண்ணா, இது நம்ம பர்சனல் எக்ஸ்பீரியன்ஸ்'ல எழுதுனது.. ஒரு வேளை அந்தப் பதிவுலக நண்பர்க்கு என்னைய மாதிரி ஸ்ட்ராங் பாடி இல்லைன்னு நினைக்குறேன் :):)
வந்ததற்கு மிக்க நன்றி. தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
//
@ Narsim - அண்ணா, மிக்க நன்றி.. கண்டிப்பாக நிறைய எழுதுவேன் -- என்றும் உங்களனைவரின் ஆதரவோடு..
தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
//
//ஞயாபகத்துக்கு //
இத பத்து வாட்டி சத்தம் போட்டு படிக்கவும்.
//உங்க தொப்பை பல மடங்கு பெரிதாகுவதற்கு வாய்புகள் அதிகம்.//
இன்னைக்கு தினகரன்ல போட்டிருந்தான் பாஸு.. பீர் தொந்தி இருக்கற ஆண்களை லேடீஸ்க்கு ரொம்ப பிடிக்குமான்.
டோண்டு வர்ரி.. பீ ஹாப்பி!
இந்த மாதிரி "அதிமேதாவிகளின் கண்டுபிடிப்புகள்" எல்லாம் பீர் உற்பத்தியாளர்களின் ஏற்பாடாக இருக்க வாய்ப்பிருக்கு. ஒரு காலத்தில் சிகரெட்டு குடிச்சா நல்லதுன்னு இதே போல அதிமேதாவிகள் சான்றளிச்ச கதை தெரியுமா? http://www.sourcewatch.org/index.php?title=Tobacco_Institute#Using_Scientists
@பரிசல்காரன் - //ஞயாபகத்துக்கு //
இத பத்து வாட்டி சத்தம் போட்டு படிக்கவும்.//
அண்ணா, சுட்டிக்காட்டியதற்கு நன்றி.. நான் உங்களிடம் எதிர்பார்ப்பதும் இதை தான்.. கண்டிப்பாக அடுத்த முறை அந்த வார்த்தையை உபயோகப்படுத்தும் முன் உங்கள் பின்னூட்டம் ஞாபகத்திற்கு வரும்..
அப்பறமா, பாலோயர் ஆனதுக்கு ரெம்ப நன்றி.. யாருமே இல்லாம அஜித் படம் ஓடுற தியேட்டர் மாதிரி இருந்தது.. ஆரம்பிச்சு வச்சதுக்கு இன்னொரு நன்றி.. பரிசல் அண்ணாவே இருக்காங்கனு கூட்டத்த கூட்டிடலம்..
அடுத்த பதிவு போட்ட உடனே சொல்றேன்.. மறக்காம வந்துடுங்க'ணா..
@பரிசல்காரன் - //உங்க தொப்பை பல மடங்கு பெரிதாகுவதற்கு வாய்புகள் அதிகம்.
இன்னைக்கு தினகரன்ல போட்டிருந்தான் பாஸு.. பீர் தொந்தி இருக்கற ஆண்களை லேடீஸ்க்கு ரொம்ப பிடிக்குமான்.
டோண்டு வர்ரி.. பீ ஹாப்பி!//
அப்பாடா, அப்ப இனிமேல் அந்தக் கவலையும் இல்லாம குடிக்கலாம்..
@Sundar - பேர பார்த்த உடனேயே சும்மா அதிர்ந்துச்சு.. இப்படி எல்லாம் மடக்குனா எப்படி? நாங்களே ஏதோ அப்படி இப்படி'னு எதாவது எழுதி பெரிய ஆளாயிடலாம்னு பார்த்த ரெம்ப கஷ்டம் போலேயே..
எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அவர்தம் பின்புலமும் பணவரவும் தெரிந்து கேட்கனும். இந்தக்கால நிறுவன முதலாளித்துவ ஒழுக்கங்கள் அப்படி. சிகரெட்டு மட்டுமல்ல, சாக்கிலட்டு மாதிரி இன்னும் பல பொருட்கள் அப்படித்தான்.
மத்தபடி உன் எழுத்து நடை நல்லாத்தான் இருக்குது. அந்தப்பக்கத்து தகவலையும் பதிந்து வைக்கத்தான் அந்தப் பின்னூட்டம்.
@Sundar - ஓஹோ.. அதான பார்த்தேன்.. நம்ம போஸ்ட்டில் பிழையா அப்படினு சிவன் ரேஞ்சுக்கு யோசிக்க ஆரம்பிச்சுட்டேன்..
மற்றபடி, வந்தமைக்கும் கருத்து சொன்னமைக்கும் மிக்க நன்றி..
பீர் குடிச்சா எம்புட்டு அடிச்சாலும் மப்பு ஏறுவதில்லை நண்பா!
ஏழு,எட்டு அடிச்சா தான் லைட்டா எறும்பு கடிச்சா மாதிரி இருக்கு!
அதனால நம்ம சாய்ஸ் எப்பவுமே ஹாட் தான்!
@வால்பையன் -
//ஏழு,எட்டு அடிச்சா தான் லைட்டா எறும்பு கடிச்சா மாதிரி இருக்கு!//
வாஸ்தவம் தான்,ஆனா நம்ம உடம்புக்கு இதான் ஓ-கே'வா இருக்கு.. இல்லேன்னா அப்பறம் மேல சொன்ன டேஸ்டிங் தான் நடக்கும் :))
கருத்துக்கு மிக்க நன்றி..
கார்ல்ஸ்பெர்க் பியர் அடிச்சு எத்தனை வருஷமாச்சு தெரியுமா... ஏன்யா இப்படி வயத்தெரிச்சலைக் கொட்டிகிறீங்க..
நாங்க எல்லாம் இப்ப பெக்ஸ்க்கு மாறிட்டோம்...
எவ்ளோ சரக்கு வேணும்னாலும் அடிச்சுடுறேன் பாசு இந்த பீர் மட்டும் அடிச்சா ஒத்துக்கவே மாட்டேன்னுது ஒமட்டுது....என்னா பண்றது?
@இராகவன் நைஜிரியா - ஏன்? கார்ல்ஸ்பெர்க் நைஜிரியா'ல கிடைக்காதா? ஆச்சர்யமா இருக்குதே.. இங்க வந்தா சொல்லுங்க.. நானே வாங்கித் தரேன்..
@பிரியமுடன்.........வசந்த் - என்னன்னா இப்படி சொல்லிடீங்க? நம்ம விஷயத்துல இதுக்கு எதிர்மாறால நடக்குது..
Post a Comment
எவ்வளவோ பண்றீங்க.. இதப் பண்ண மாட்டீங்களா??
Subscribe to Post Comments [Atom]
<< Home